Home செய்திகள் உலக செய்திகள் அல்ஜீரியாவில் மருத்துவமனையில் பயங்கர தீ

அல்ஜீரியாவில் மருத்துவமனையில் பயங்கர தீ

199
0

ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள எல் உயேத் மாகாணத்தின் தலைநகர் எல் உயேத்தில் உள்ள தனியார் மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் நேற்று காலை திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ, சற்று நேரத்தில் மகப்பேறு பிரிவு முழுவதிலும் பரவியது.

அல்ஜியர்ஸ், மருத்துவமனை ஊழியர்கள் மகப்பேறு பிரிவில் இருந்த கர்ப்பிணிகள், குழந்தை பெற்ற பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளை பத்திரமாக வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அதன்படி 107 பெண்கள், 11 குழந்தைகள் மற்றும் டாக்டர் கள், நர்சுகள் உள்பட 28 ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். எனினும் தீயின் கோரப்பிடியில் சிக்கியும், புகையினால் மூச்சு திணறல் ஏற்பட்டும் 8 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.

Advertisements

Leave a Reply