Home செய்திகள் பெண் மருத்துவரை எரித்து கொன்ற சம்பவத்தில் கொடூர சைக்கோக்கள் வேட்டையாடப்பட வேண்டும்

பெண் மருத்துவரை எரித்து கொன்ற சம்பவத்தில் கொடூர சைக்கோக்கள் வேட்டையாடப்பட வேண்டும்

160
0

தெலுங்கானாவின் கொல்லூர் பகுதியில் இருந்து பணி முடிந்து ஷம்ஷாபாத்தில் உள்ள தனது வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் பிரியங்கா ரெட்டி (வயது 27) – கால்நடை பெண் மருத்துவர் திரும்பி வந்துள்ளார்.

வழியில் அவரது வாகனம் பழுதடைந்து உள்ளது. இதுபற்றி தனது சகோதரியிடம் செல்போன் வழியே பேசியுள்ளார். பின்னர் 9.44 மணிக்கு தொடர்பு கொண்டபொழுது பிரியங்காவின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் சுங்க சாவடிக்கு சென்று அவரை தேடியுள்ளனர். இதேவேளையில் அங்கிருந்து 30 கி.மீ. தொலைவில் சுங்கச்சாவடி அருகே பாலம் ஒன்றின் கீழ்எரிந்து கிடந்த உடல் பற்றி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு உள்ளது. இதன்பின்பு குடும்பத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் கொல்லப்பட்டவர் பிரியங்கா என போலீசார் உறுதிப்படுத்தினர்.

அவர் சுங்க சாவடி அருகே தனியான பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டு, கற்பழிக்கப்பட்டு பின்பு எரித்து கொல்லப்பட்டு இருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Advertisements

Leave a Reply