Home செய்திகள் தமிழகத்தில் பள்ளிகள் விடுமுறை நீடிக்கப்பட்டிருக்கிறது

தமிழகத்தில் பள்ளிகள் விடுமுறை நீடிக்கப்பட்டிருக்கிறது

195
0

தமிழகத்தில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வு விடுமுறை விடப்பட்டிருக்கிறது. இந்த விடுமுறை முடிந்து ஜனவரி 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மாணவர்களின் அரையாண்டுத் தேர்வு விடுமுறையை பயன்படுத்தி, பள்ளிகளில் வாக்குச்சாவடி அமைத்து 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் நடத்தி முடித்திருக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி நடைபெற இருக்கிறது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குச் சீட்டு அடிப்படையில் நடக்கிறது. எனவே 2-ம் தேதி காலையில் தொடங்கும் வாக்கு எண்ணிக்கை சில இடங்களில் ஏதாவது காரணங்களால் மறுநாள் வரை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. எனவே பள்ளிகள் திறப்பை ஜனவரி 3-ல் இருந்து, 4-ம் தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும் என ஆசிரியர் அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.

இந்தச் சூழலில் இன்று (டிசம்பர் 30) தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குனர் வெளியிட்ட அறிவிப்பில், ‘அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அரையாண்டுத் தேர்வு முடிந்து ஜனவரி 4-ம் தேதி திறக்கப்படும்’ என கூறப்பட்டிருக்கிறது. எனவே பள்ளிகள் திறப்பு மேலும் ஒருநாள் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

Advertisements

Leave a Reply