Home செய்திகள் டெல்லி விமான நிலையத்தில் ஆர்டிஎக்ஸ் வெடிபொருட்கள் இருப்பதாக சந்தேகம்

டெல்லி விமான நிலையத்தில் ஆர்டிஎக்ஸ் வெடிபொருட்கள் இருப்பதாக சந்தேகம்

145
0

தலைநகர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், நள்ளிரவு 1 மணியளவில் கேட்பாரற்று கருப்பு நிற பை ஒன்று கிடந்தது. இதைக்கவனித்த மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர், பையை கைப்பற்றி சோதனை நடத்தினர். இதனால், விமான நிலையத்தில், பயணிகள் வெளியே செல்ல சிறிது நேரம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

கைப்பற்றப்பட்ட பையில், ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து, வெடிகுண்டை செயலிழக்க வைக்கும் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. எனினும், வெடிபொருளின் உண்மையான தன்மை இன்னும் கண்டறியப்படவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.

24 மணி நேர கண்காணிப்பிற்கு பிறகே, வெடிபொருள் குறித்த உண்மையான தகவல் தெரியவரும் என்று கூறப்படுகிறது. வெடிபொருளுடன் பை கைப்பற்றப்பட்டுள்ளதால், டெல்லி விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply