Home சினிமா குணசித்திர நடிகர் டி.எஸ். ராகவேந்திரா காலமானார்

குணசித்திர நடிகர் டி.எஸ். ராகவேந்திரா காலமானார்

226
0

வைதேகி காத்திருந்தால் படத்தில் அறிமுகமானவர் டி.எஸ். ராகவேந்திரா, 75 வயதாகும் இவர் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.

கே.கே. நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மதியம் 2 மணிக்கு இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது என நடிகர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. வைதேகி காத்திருந்தால், சிந்து பைரவி, சின்ன தம்பி, பெரிய தம்பி, விக்ரம், அண்ணா நகர் முதல் தெரு, ஹரிசந்திரா, வாய் கொழுப்பு உள்ளிட்ட பல படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நடிப்பு மட்டுமின்றி இசைஞானமும் கொண்டவர் டி.எஸ். ராகவேந்திரா. 1980ம் ஆண்டு வெளியான யாக சாலை படத்திற்கு இசையமைத்துள்ளார். அதன் பிறகு உயிர் மற்றும் 1986ம் ஆண்டு வெளியான படிக்காத பாடம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

அப்பா கதாபாத்திரங்களில் தனது முத்திரை நடிப்பை பதித்த டி.எஸ். ராகவேந்திராவின் மறைவு தமிழ் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisements

Leave a Reply