Home விளையாட்டு கிரிக்கெட் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை இழந்தார் விராட் கோலி

டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை இழந்தார் விராட் கோலி

182
0

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதலிடம் வகித்து வந்த விராட் கோலி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியின் 2-வது இன்னிங்சில் டக் ஆவுட் ஆனதால், முதலிடத்தை பறிகொடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித் 904 -புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளார். 2-வது இடத்தில் உள்ள விராட் கோலி 903 புள்ளிகள் பெற்றுள்ளார்.

878 புள்ளிகளுடன் வில்லியம்சன் 3-வது இடத்திலும், 825 புள்ளிகளுடன் புஜாரா 4-வது இடத்திலும் உள்ளனர். 725 புள்ளிகளுடன் ரகானே 7-வது இடத்தில் உள்ளார். பந்து வீச்சாளர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் பட் கம்மின்ஸ் 908 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றுள்ளார். தென் ஆப்பிரிக்காவின் ரபாடா 851 புள்ளிகள் பெற்று 2-ஆம் இடம் வகிக்கிறார். 835 புள்ளிகளுடன் பும்ரா 3 ஆம் இடத்தில் உள்ளார்.

ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் விராட் கோலி (895) புள்ளிகளுடன் முதல் இடம் பெற்றுள்ளார். பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் பும்ரா (797 புள்ளிகளுடன்) முதலிடம் வகிக்கிறார்.

Advertisements

Leave a Reply