Home விளையாட்டு கிரிக்கெட் அபார வெற்றி – முதல் வெற்றியை பதிவு செய்த இந்தியா

அபார வெற்றி – முதல் வெற்றியை பதிவு செய்த இந்தியா

254
0

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இவ்விரு அணிகளும் விளையாடும் முதல் போட்டி என்பதால் இந்த போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு ஆரம்பம் முதலே இருந்தது.

இந்த போட்டியில் ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் தனது அணி முதலில் பந்துவீச முடிவெடுத்தார்.ஆட்டத்தின் முதல் நாளில் மைதானத்தில் ஈரப்பதம் இருந்ததால் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக சூழல் இருந்தது.
வெற்றிபெற 419 ரன்கள் எடுக்கவேண்டும் என்ற இமாலய இலக்கு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

மிக பெரிய இலக்கை துரத்திய மேற்கிந்திய தீவுகள் அணி பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே நிதானமின்றி விளையாடினர். அந்த அணியின் பல பேட்ஸ்மேன்கள் தவறான ஷாட்கள் அடித்து ஆட்டமிழந்தனர்.

குறிப்பாக இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஐஸ்ப்ரீத் பும்ராவின் புயல்வேக பந்துவீச்சை மேற்கிந்திய தீவுகள் அணியால் சமாளிக்கமுடியவில்லை

எட்டு ஓவர்கள் பந்துவீசிய பும்ரா 7 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது இந்தியாவின் வெற்றியை மேலும் எளிதாக்கியது.இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் எடுத்த பும்ரா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் என தான் விளையாடிய அனைத்து வெளிநாடுகளிலும் 5 விக்கெட்டுகள் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.

வெற்றி பெற 419 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 100 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தான் விளையாடிய முதல் போட்டியிலேயே வெற்றியை பதிவு செய்தது இந்தியா.

ரஹானே ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Advertisements

Leave a Reply