Home மற்றவை இந்தியாவில் அறிமுகமான புது எஸ்யூவி கார்

இந்தியாவில் அறிமுகமான புது எஸ்யூவி கார்

155
0

இந்தியாவில் இது பண்டிகை காலம் என்பதால் பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது புது கார்களை அறிமுகம் செய்து வருகிறது. மாருதி சூசுகி நிறுவனம் S-Presso காரை அறிமுகம் செய்ததை தொடர்ந்து ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனமானது தங்களது புது எஸ்யூவி காரான Kodiaq Scout அறிமுகம் செய்துள்ளது. காரின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் பல அப்டேட்களுடன் வரும் இந்த காரின் விலை 34 லட்சம் ரூபாயாக உள்ளது.

வெளிப்புற அப்டேட்களை எடுத்து கொண்டால் முன்பக்க மற்றும் பின்பக்கத்தில் புது ஸ்கிட் பிளேட் பெற்றுள்ளது. 18-இன்ச் அலாய் சக்கரம், சில்வர் நிற ORVM, க்ரில், ரூப் ஆகியவை இந்த புது காரில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. உட்புறத்தில் அனைத்தும் கருப்பு நிறத்தில் உள்ளது. சீட், டாஸ்போர்ட் உட்பட அனைத்தும் கருப்பு நிறம் பெற்றுள்ளது.

மெக்கானிக்கலாக 2.0 லிட்டர் TDI இன்ஜின் டீசல் இன்ஜின் பெற்றுள்ள இந்த காரானது 147 bhp பவரையும் 340 Nm உட்ச டார்க்கையும் வழங்குகிறது. 7 ஸ்பீட் DSG ஆட்டோமெடிக் ட்ரான்ஸ்மிஷன் உள்ள இந்த மோட்டரில் 9 ஏர்பேக், 360 டிகிரி காமரா, சோர்வு அடைந்தால் அலர்ட் ஆகிய பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன. இந்த காரில் புதியதாக Off-Road mode உள்ளது.

பானரோமிக் சன்ரூப், தொடுதிரை, ஆப்பிள் கார்பிளே உட்பட அனைத்து புது தொழிற்நுட்ப அம்சங்களும் பெற்றுள்ள இந்த காரானது போர்ட் எண்டிவர், டொயோட்டா பார்ச்சூனர், மஹிந்திரா அல்டூராஸ் ஜி4 ஆகிய கார்களுக்கு போட்டியாக களமிறக்கப்படும்.

Advertisements

Leave a Reply