Home செய்திகள் ‘நிர்பயா’ நிதியில் வெறும் ரூ.6 கோடியை மட்டுமே தமிழக அரசு செலவு செய்துள்ளது

‘நிர்பயா’ நிதியில் வெறும் ரூ.6 கோடியை மட்டுமே தமிழக அரசு செலவு செய்துள்ளது

156
0

டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனையடுத்து பெண்களின் பாதுகாப்புக்கான திட்டங்களை செயல்படுத்தும் வகையில் மத்திய அரசு சார்பில் நிர்பயா நிதி என்ற பெயரில் 1000 கோடி ரூபாய் வரை ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நிர்பயா என்பதற்கு பயமற்றவள் என்று பொருளாகும்.

மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட நிதியில் 50 சதவீதத்தை கூட மாநிலங்கள் பயன்படுத்தவில்லை என மக்களவையில் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட ரூ.190 கோடியில் ரூ. 6 கோடி மட்டுமே செலவிடப்பட்டு உள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்களை தடுக்க எந்த மாநிலத்திலும் நிதி செலவிடப்படவில்லை என்றும், 18 மாநிலங்களில் பேரிடர் நிவாரண நிதி பயன்படுத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நிர்பயா’ நிதியில் வெறும் ரூ.6 கோடியை மட்டுமே தமிழக அரசு செலவு செய்துள்ளது என்று வெளியான தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.

Advertisements

Leave a Reply