Home செய்திகள் மாணவிக்கு பாலியல் தொல்லை: அரசு பள்ளி ஆசிரியர்

மாணவிக்கு பாலியல் தொல்லை: அரசு பள்ளி ஆசிரியர்

188
0

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 50). இவர் கோவையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். 7, 8-ம் வகுப்பு அறிவியல் பாட ஆசிரியராக இருந்தார். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந் தேதி முதல் ஜனவரி 30-ந் தேதி வரை அந்த பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

அந்த மாணவி இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதுகுறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் போில் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி ஆசிரியர் நடராஜன் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்தனா்.

இதைத்தொடர்ந்து கடந்த 1-ந் தேதி இரவு நடராஜன் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அத்துடன் நடராஜன் மேலும் சில மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் தற்போது அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் நடவடிக்கை எடுத்து உள்ளார்.

Advertisements

Leave a Reply