Home மற்றவை திருமணத்திற்கு முன்பு உடலுறவுக்குத் தடை – மக்கள் போராட்டம்

திருமணத்திற்கு முன்பு உடலுறவுக்குத் தடை – மக்கள் போராட்டம்

224
0

இந்தோனீசியாவில் திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக் கொள்வதைத் தடை செய்யும் சட்ட முன் வரைவுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து இந்தோனீசியா நாடாளுமன்றம் முன்பு போராட்டம் நடத்தினர்.

திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக் கொண்டால் ஓராண்டு சிறைத் தண்டனை.
திருமணத்திற்கு வெளியே இன்னொரு நபருடன் சேர்ந்து வாழ்ந்தால் வாழ்ந்தால் ஆறு மாத சிறைத் தண்டனை
நாட்டின் அதிபரை, துணை அதிபரை, மதத்தை, அரசு நிறுவனங்களை, தேசியக் கொடியை அவமானப்படுத்தும் விதமாகச் செயல்படுவது சட்ட விரோதம்
பாலியல் வல்லுறவு அல்லது உடல்நல கோளாறு ஆகிய காரணங்கள் இல்லாமல் கருவைக் கலைத்தால் நான்கு ஆண்டு வரை சிறை.
– இந்த மசோதாக்களைச் சட்டமாக்க இந்தோனீசியா நாடாளுமன்றம் முடிவு செய்தது. இதனை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த அவர்கள் மீது போலீஸார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர்.

Advertisements

Leave a Reply