Home மற்றவை சென்செக்ஸ் 74 புள்ளிகள் இழப்பு; நிப்டி 37 புள்ளிகள் இறங்கியது

சென்செக்ஸ் 74 புள்ளிகள் இழப்பு; நிப்டி 37 புள்ளிகள் இறங்கியது

316
0

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 74 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 37 புள்ளிகள் இறங்கியது.

சென்செக்ஸ்
மும்பை பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 74.48 புள்ளிகள் சரிவடைந்து 37,328.01 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 37,511.55 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 37,219.90 புள்ளிகளுக்கும் சென்றது.
இந்தச் சந்தையில் 918 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 1,524 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தும் இருந்தது. 141 பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை. நேற்று மொத்த வர்த்தகம் ரூ.2,305 கோடியாக உயர்ந்தது. கடந்த திங்கள்கிழமை அன்று அது ரூ.1,824 கோடியாக இருந்தது.

தேசிய பங்குச்சந்தை
தேசிய பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் நிப்டி 36.90 புள்ளிகள் குறைந்து 11,017 புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 11,076.30 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 10,985.30 புள்ளிகளுக்கும் சென்றது.

Advertisements

Leave a Reply