Home செய்திகள் உத்தரபிரதேசத்தில் 144 தடை உத்தரவு

உத்தரபிரதேசத்தில் 144 தடை உத்தரவு

202
0

உத்தரபிரதேசத்தில் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புலந்த்சாகர், ஆக்ரா, சம்பல், பிஜ்னோர், சஹரன்பூர், காஜியாபாத், முசாபர்நகர், ஃபிரோசாபாத், மதுரா, ஷாம்லி மற்றும் அலிகார் உள்பட 14 மாவட்டங்களில் வதந்திகளைத் தவிர்க்க இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை என்பதால் மசூதிகளில் தொழுகை நடத்தும் மக்களை கருத்தில் கொண்டு, அசம்பாவிதங்களை தவிர்க்க ஆளில்லாத குட்டி விமானங்கள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

லக்னோ, அயோத்தி உள்ளிட்ட நகரங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோரக்பூரில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வன்முறைகள் போல் எங்கும் ஏற்படாதிருக்க துணை ராணுவப்படைகள் குவிக்கப்பட்டுள்ளன. போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தி, அமைதியை காக்கும்படி வலியுறுத்தினர். சமூக ஊடகங்களை தீவிரமாக கண்காணித்து வருவதாக போலீசார் எச்சரித்துள்ளனர்.

இதற்கிடையில், சமீபத்தில் இயற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது உத்தரபிரதேச அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

சமூக ஊடகங்களில் ஆட்சேபகரமான உள்ளடக்கத்தை வெளியிட்டதற்காக மொத்தம் 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்ட 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 7,513 ட்விட்டர் பதிவுகள், 9,076 பேஸ்புக் பதிவுகள் மற்றும் 172 யூடியூப் வீடியோக்கள் முடக்கப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply