Home செய்திகள் ஏ.டி.எம்.களில் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் எடுக்க ‘ஓ.டி.பி.’

ஏ.டி.எம்.களில் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் எடுக்க ‘ஓ.டி.பி.’

141
0

ஏ.டி.எம். எந்திரத்தில் நடக்கும் சட்டவிரோத பணபரிவர்த்தனையை குறைக்கும் விதமாக ரூ.10 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுப்பதற்கு ஒரு முறை ரகசிய எண் பயன்படுத்தும் திட்டத்தை நாங்கள் அறிமுகம் செய்கிறோம்.

இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை இந்த முறை அமலில் இருக்கும். இந்த ரகசிய எண் வாடிக்கையாளர்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு வரும். இது சட்டவிரோத பணபரிவர்த்தனைகளில் இருந்து ஏ.டி.எம். வாடிக்கையாளர்களை பாதுகாக்கும்.

ஜனவரி 1-ந்தேதி முதல் நாடு முழுவதும் இம்முறை செயல்பாட்டுக்கு வருகிறது. ஆனால் ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் இதர வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்தால் இந்த பாதுகாப்பு முறை பொருந்தாது.

இந்த புதிய முறைப்படி இரவு நேரங்களில் வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் எடுத்தால் ஓ.டி.பி. வரும் வாடிக்கையாளர்கள் அந்த எண்ணை குறிப்பிட்ட பிறகு தான் எந்திரத்தில் இருந்து பணம் வரும்.

Advertisements

Leave a Reply