Home செய்திகள் தடைசெய்யப்பட்ட 500- 1000 ரூபாய் நோட்டுகளை கொண்டு ஷாப்பிங் மால்கள் வாங்கிய சசிகலா!!!

தடைசெய்யப்பட்ட 500- 1000 ரூபாய் நோட்டுகளை கொண்டு ஷாப்பிங் மால்கள் வாங்கிய சசிகலா!!!

152
0

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய உதவியாளர் சசிகலாவுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை ஐகோர்ட்டில் வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்து உள்ளது.

அதில் நவம்பர் 8, 2016-க்குப் பிறகு பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை பயன்படுத்தி 1 ரிசார்ட், இரண்டு ஷாப்பிங் மால்கள், ஒரு சாப்ட்வேர் கம்பெனி, ஒரு சர்க்கரை ஆலை, ஒரு காகித ஆலை மற்றும் 50 காற்றாலைகள் ஆகிய, பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, 2016 நவம்பர் 8ம் தேதிக்கு பிறகு, அதாவது பண மதிப்பிழப்பின் மூலம் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்த பிறகு அந்த பணத்தை கொடுத்து வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்த சொத்துக்களை வாங்க செல்லாத நோட்டுக்களை குறிப்பிடத்தக்க அளவுக்கு பயன்படுத்தியிருந்தாராம் சசிகலா. இந்த பணத்தை வாங்கிக் கொண்டு சொத்துக்களை விற்றவர்கள், அந்த பணத்தை எப்படியோ வங்கிகளில் மாற்றி செல்லும் பணமாக்கியிருக்க கூடும் என்ற சந்தேகம் இப்போது எழுகிறது.

Advertisements

Leave a Reply