Home மற்றவை 4 மாதங்களில் 26 கிலோ உடல் எடை குறைப்பு

4 மாதங்களில் 26 கிலோ உடல் எடை குறைப்பு

201
0

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பிரசவத்திற்கு பிறகு 4 மாதங்களில் 26 கிலோ உடல் எடை குறைத்ததன் ரகசியத்தை இன்ஸ்டாகிராம் வீடியோவில் பகிர்ந்துள்ளார்.

இந்திய டென்னிஸ் உலகின் ஜொலிக்கும் நட்சத்திரமாக விளங்கியவர் சானியா மிர்சா. இவருக்கும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் இடையே திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. கருத்தரிப்பு காரணமாக, சானியா மிர்சாவின் எடை கணிசமாக அதிகரித்திருந்தது.

இதனிடையே, சானியா மிர்சா, இன்ஸ்டாகிராமில் தனது தற்போதைய போட்டோவை பகிர்ந்திருந்தார். அதில் ஸ்லிம் ஆக உள்ளார். இதனையடுத்து, உடல் எடை குறைப்பின் ரகசியத்தை அவரை பார்ப்பவர்கள் மட்டுமல்லாது, இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களிலும் அவரை பின்தொடர்பவர்களும் கேட்க துவங்கிவிட்டனர்.

அதன் விளைவாக, சானியா மிர்சா, 4 மாதங்களில் 26 கிலோ உடல் எடையை குறைத்ததன் ரகசியத்தை இன்ஸ்டாகிராமில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். இந்தமாதிரி கடின உடற்பயிற்சியை, குழந்தை பெற்ற இரண்டரை மாதங்களிலேயே தான் துவங்கி விட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply