Home செய்திகள் அயோத்தியில் ராமர் கோவில் – மோடி அறிவிப்பு

அயோத்தியில் ராமர் கோவில் – மோடி அறிவிப்பு

144
0

இந்திய வரலாற்றில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்து வந்த அயோத்தி நில விவகாரம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9-ந்தேதி தீர்ப்பு வழங்கியது. வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்ட சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. மத்திய அரசு, பிரத்யேக அறக்கட்டளை ஒன்றை 3 மாதத்துக்குள் நிறுவி அந்த அறக்கட்டளையின் உதவியோடு அயோத்தியில் கோவிலை கட்ட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் சன்னி வக்பு வாரியத்துக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் நிலத்தை தனியாக வழங்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு கூறியது. அறக்கட்டளை அமைப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு அளித்த 3 மாத காலக்கெடு வருகிற 9-ந்தேதியுடன் நிறைவடைய உள்ளது.

இந்தநிலையில், அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவதற்காக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி அறக்கட்டளை அமைக்கப்பட உள்ளதாக மக்களவையில் பிரதமர் மோடி நேற்று தெரிவித்தார்.

இதுகுறித்த தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி, “ஸ்ரீ ராம ஜென்மபூமி தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, ‘ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற பெயரில் அறக்கட்டளை அமைப்பதற்கான வரலாற்று சிறப்புமிக்க முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. இந்த அறக்கட்டளையில் 15 அறங்காவலர்கள் இருப்பார்கள், அதில் ஒரு அறங்காவலர் எப்போதும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவராக இருப்பார்.

சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் வகையில் எடுக்கப்படும் இத்தகைய முடிவுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடியை வாழ்த்துகிறேன். கடவுள் ராமரை அவரது பிறந்த இடத்தில் அமைய உள்ள பிரமாண்டமான கோவிலில் அனைவரும் காண முடியும் என்று நான் முழுமையாக நம்புகிறேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

Advertisements

Leave a Reply