Home விளையாட்டு டென்னிஸ் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற பி.வி.சிந்து

உலக சாம்பியன் பட்டத்தை வென்ற பி.வி.சிந்து

205
0

சுவிட்சர்லாந்தின் பா.செல் நகரில் உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டன் தொடர் நடைபெற்றது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டியில், உலகின் 4-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நசோமி ஒகுஹராவுடன் மோதினார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து. தங்கம் வென்றே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் களம் கண்டார் சிந்து. அதன்படி, தொடக்கம் முதலே பி.வி. சிந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது ஆட்டத்திற்கு ஒகுஹராவால் ஈடுகொடுக்க முடியவில்லை.

இதனால் முதல் செட்டை 21-7 என பி.வி. சிந்து எளிதாகக் கைப்பற்றினார். 2-வது செட்டிலும் அதே உத்வேகத்துடன் விளையாடினார். இதனால் 2-வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்தி, அதையும் 21-7 எனக் கைப்பற்றி, ஜப்பான் வீராங்கனை நசோமியை தோற்கடித்துத் தங்கம் வென்றார். இதன்மூலம், உலக சாம்பியன்ஷிப் தொடரில் முதன்முதலாகத் தங்கம் வென்ற இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை பி.வி.சிந்து படைத்தார்.

என் அம்மாவின் பிறந்தநாள் இன்று. எனது வெற்றியை என் தாய்க்கு சமர்ப்பிக்கிறேன். பிறந்த நாளை முன்னிட்டு என் அம்மாவுக்கு எதாவது கிஃப்ட் கொடுக்கலாம் என்று நினைத்திருந்தேன். இறுதியில் நான் வென்ற தங்கப்பதக்கத்தை அவருக்கு கிஃப்டாக கொடுத்துள்ளேன். நான் இருக்கும் இந்தநிலைக்கு எனது பெற்றோர் தான் காரணம்.

Advertisements

Leave a Reply