Home செய்திகள் காதலை மறைக்க பேய் பிடித்தது போன்று நாடகமாடிய இளம்பெண்

காதலை மறைக்க பேய் பிடித்தது போன்று நாடகமாடிய இளம்பெண்

229
0

சேலம் கன்னங்குறிச்சி பாண்டியன் தெருவில் காளியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் பக்தர்களுக்கு திருநங்கை அருள்வாக்கு கூறுவது உண்டு. திருநங்கை அருள்வாக்கு சொல்லும் நேரங்களில் முதலில் மயில் இறகால் வருடியும், சில நேரங்களில் பிரம்பாலும் அடிக்க தொடங்கி விடுவார். இதைப்பார்த்து சில நேரங்களில் பக்தர்கள் வெலவெலத்து போய்விடுவார்கள்.

இந்தநிலையில் சேலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு பேய் பிடித்ததாக கூறி, அந்த பெண்ணின் பெற்றோர், இந்த கோவிலுக்கு அழைத்து சென்றனர். கோவிலில் இளம்பெண்ணுக்கு, திருநங்கை பேய் ஓட்ட தொடங்கினார்.

பின்னர் இளம்பெண்ணை திருநங்கை பல்வேறு வார்த்தைகளால் வசைபாடியதுடன், பிரம்பால் அடித்தார். இதனால் அந்த பெண் அம்மா வலிக்கிறது என சத்தம் போட்டார். தடுக்க வந்த பெற்றோர்களை திருநங்கை அதட்டியதால் அவர்கள் அமைதியாகி விட்டனர்.

இறுதியாக அந்த இளம்பெண், ஒருவரை காதலிப்பதாகவும், அதனை மறைக்க பேய் பிடித்ததாக கூறி நாடகமாடியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பொய் சொல்லமாட்டேன் என அந்த பெண் தன்னுடைய தந்தையை தாண்டி சத்தியம் செய்தார். பின்னர் அந்த பெண்ணை எரியும் சூடத்தை அணைத்து சத்தியம் செய்யுமாறு திருநங்கை கூறினார்.

இந்த சம்பவம் அனைத்தும் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply