Home செய்திகள் வகுப்பறையில் பிளஸ் ஒன் மாணவி தற்கொலை

வகுப்பறையில் பிளஸ் ஒன் மாணவி தற்கொலை

242
0

மதுரையில் பரபரப்பு; வகுப்பறையில் பிளஸ் ஒன் மாணவி தற்கொலை – பள்ளிக்கு விடுமுறை!
மதுரை கே.புதூர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம் போல் பள்ளி தொடங்கியது. அனைத்து மாணவர்களையும் போல், பிளஸ் ஒன் மாணவி ஒருவர், பள்ளிக்குச் சென்றுள்ளார்.

இதையடுத்து வகுப்பறையில் யாரும் இல்லாத சூழலில், தனது வாழ்வை அழித்துக் கொள்ளும் முடிவை செயல்படுத்தியுள்ளார். அதாவது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதைக் கண்ட சக மாணவிகள், உடனே பள்ளி நிர்வாகத்திற்கு தெரிவித்தனர். அவர்கள் அருகிலுள்ள போலீசாருக்கு தகவல் கூறினர். சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்து பள்ளிக்கு விரைந்து வந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நிர்வாகத்திடம் வாக்குவாதம் செய்தனர்.

பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சூழலில் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply