Home செய்திகள் மஞ்சள் நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்பட்டது

மஞ்சள் நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்பட்டது

191
0

புதுவையில் உள்ள பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்குவது தொடர்பாக கவர்னர்-அமைச்சரவை இடையே தொடர்ந்து பிரச்சினை இருந்து வருகிறது. அனைத்து திட்ட பயன்களுக்கான நிதியும் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

அதேபோல் இலவச அரிசிக்கு பதிலாக அதற்கான தொகையையும் பயனாளிகளின் வங்கிக்கணக்கிலேயே செலுத்த வேண்டும் என்று கவர்னர் வலியுறுத்தி வருகிறார். ஆனால் இலவச அரிசிதான் வழங்கவேண்டும் என்று அமைச்சரவை வலியுறுத்தி வருகிறது. இதையொட்டி கவர்னர்-அமைச்சரவை இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் இதுதொடர்பான கோப்பு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதனிடையே அரிசி வழங்காவிட்டால் அதற்கான பணத்தை வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும் என்று சட்டமன்ற கூட்டத்தின்போது பல்வேறு எம்.எல்.ஏ.க்களும் வலியுறுத்தினார்கள். அரிசி வழங்குவதில் பிரச்சினை உள்ளதால் பணம் வழங்கினால்கூட போதும் என்று பொதுமக்களில் பல்வேறு தரப்பினரும் வெளிப்படையாக பேசத் தொடங்கினார்கள். இதைத்தொடர்ந்து பிரச்சினை தீரும் வரை அரிசிக்கான பணத்தை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்த அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அமைச்சர் கந்தசாமியின் அலுவலகம் ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

குடும்ப அட்டைதாரர் களுக்கு அரிசிக்கு பதிலாக பணம் செலுத்த முடிவு செய்யப்பட்டு அனைத்து மஞ்சள் நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கும் அட்டை ஒன்றுக்கு ரூ.300 என்ற வகையில் ஜனவரி மாதத்தொகை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் பிப்ரவரி, மார்ச் ஆகிய 2 மாதங்களுக்கான பணம் ரூ.600 மஞ்சள் நிற ரேஷன் அட்டை தாரர்களுக்கு இன்னும் ஒரு வார காலத்திற்குள் அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.

அனைத்து சிவப்பு நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இன்னும் ஒரு மாதத்திற்குள் ஏப்ரல் மாத அரிசிக்கான தொகை வழங்கப்படும். படிப்படியாக தொடர்ந்து இலவச அரிசி வழங்க நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.

Advertisements

Leave a Reply