Home சினிமா பார்த்திபனின் ‘இரவின் நிழல்’

பார்த்திபனின் ‘இரவின் நிழல்’

228
0

பார்த்திபன் நடித்து கடந்த வருடம் குப்பத்து ராஜா, அயோக்யா, திட்டம் போட்டு திருடுற கூட்டம் ஆகிய படங்கள் வந்தன. புதிய முயற்சியாக ஒத்த செருப்பு என்ற படத்தையும் எடுத்து இருந்தார். இதில் பார்த்திபன் மட்டுமே நடித்து இயக்கி இருந்தார். இந்த படத்துக்கு வரவேற்பு கிடைத்தது.

பார்த்திபன் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தை அவரே டைரக்டும் செய்கிறார். படத்துக்கு இரவின் நிழல் என்று பெயர் வைத்து இருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்த பெயரை டைரக்டர் பாரதிராஜா சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். “ஒத்த செருப்பு திரைப்படத்தின் மூலம் தமிழக இயக்குனர்கள் வரிசையில் இருந்து உலக இயக்குனர் வரிசைக்கு தன் உயரத்தை உயர்த்திக் கொண்டவர் என் பாசத்துக்குரிய பார்த்திபன். இனிய புத்தாண்டு அன்று தொடங்கும் இரவின் நிழல் உலக விருதுகள் பல வென்றெடுத்து தமிழுக்கும் தமிழனுக்கும் பெருமை சேர்ப்பாய் நிச்சயம். வாழ்த்துகள். இவன் கவிதைக்காக உங்களில் ஒருவனாக நானும் காத்திருக்கிறேன்.”

இவ்வாறு பாரதிராஜா கூறியுள்ளார்.

Advertisements

Leave a Reply