Home செய்திகள் இந்தியாவில் இருந்து தபால் சேவை மீண்டும் தொடக்கம்

இந்தியாவில் இருந்து தபால் சேவை மீண்டும் தொடக்கம்

131
0

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370-ஐ மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. இதற்கு கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான், இந்தியாவுடனான வர்த்தக உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்தது.

அத்துடன் டெல்லியில் உள்ள தங்கள் நாட்டு தூதரை திரும்ப அழைத்தும், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரை திருப்பி அனுப்பவும் செய்தது. இந்தியா – பாகிஸ்தான் இடையே இயக்கப்படும் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்தையும் நிறுத்தியது. வாகா எல்லையையும் மூடியது.

தொடர்ந்து இந்தியாவுடனான தபால் சேவையை நிறுத்திக்கொள்வதாக பாகிஸ்தான் அரசு கடந்த அக்டோபர் மாதம் திடீரென அறிவித்தது. எந்த ஒரு நோட்டீசும் வழங்காமல் தபால் சேவையை பாகிஸ்தான் நிறுத்தியிருப்பது சர்வதேச நெறிமுறைகளுக்கு எதிரானது என மத்திய அரசு கடும் கண்டனத்தை தெரிவித்தது.

இந்த நிலையில் தனது உத்தரவை திரும்ப பெறும் விதமாக இந்தியாவுடனான தபால் சேவை மீண்டும் தொடரும் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேநேரம் இந்தியாவில் இருந்து வரும் பார்சல்களுக்கான தடை தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளன.

Advertisements

Leave a Reply