Home செய்திகள் நாட்டில் லோன் மேளாவில் 9 நாட்களில் வங்கிகள் வழங்கிய தொகை ரூ.81,700 கோடி

நாட்டில் லோன் மேளாவில் 9 நாட்களில் வங்கிகள் வழங்கிய தொகை ரூ.81,700 கோடி

236
0

நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மக்கள் தங்களது வீடுகள், குடியிருப்புகளை வண்ண விளக்குகளால் அலங்கரித்தும், கொலு பொம்மைகளை வைத்தும், ஆடை, ஆபரணங்கள் மற்றும் இனிப்புகள் உள்ளிட்ட பலகாரங்களை வாங்கியும் மற்றும் கோவில்களுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டும் மகிழ்ந்தனர்.

இந்த பண்டிகை காலங்களில் கார், பைக், வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மொபைல் போன்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை அதிக அளவில் மக்கள் வாங்க வேண்டும் என்பதற்காகவும், தங்களது தயாரிப்புகளை விற்று தீர்க்கவும் பல்வேறு நிறுவனங்கள் சலுகை விலைக்கு பொருட்களை விற்பனை செய்தன.

இதனால் அவற்றை வாங்குவதற்கு வசதியாக மக்களுக்கு தேவையான நிதியை வழங்க வங்கிகளும் லோன் மேளாக்கள் போன்றவற்றை நடத்தின.

இதன்படி கடந்த அக்டோபர் 1ந்தேதியில் இருந்து 9 நாட்களில் வங்கிகள் லோன் மேளாக்களில் வழங்கிய தொகை ரூ.81 ஆயிரத்து 700 கோடி ஆகும். இந்த லோன் மேளாக்களில் புதிய கடன்களாக ரூ.34 ஆயிரத்து 342 கோடி வழங்கப்பட்டு உள்ளன என மத்திய நிதி அமைச்சகத்தின் நிதி செயலாளர் ராஜீவ் குமார் தெரிவித்து உள்ளார்.

Advertisements

Leave a Reply