பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா (755 புள்ளி) 2-வது இடத்துக்கு இறங்கியுள்ளார்.
காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் மந்தனா ஆடவில்லை. இதனால் இந்த சறுக்கல் ஏற்பட்டுள்ளது.
நியூசிலாந்து வீராங்கனை அமெ சட்டர்த்வெயிட் (759 புள்ளி) முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்திய கேப்டன் மிதாலிராஜ் 7-வது இடத்தில் உள்ளார்.
Advertisements