Home செய்திகள் ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு

ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு

225
0

‘ஒரே நாடு ஒரே ரேஷன்” திட்டத்தில் தமிழ்நாடு நிச்சயம் இணையும் – செல்லூர் ராஜு!
மத்திய அரசு அறிவித்திருக்கும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் விரைவில் தமிழகம் இணையும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

மக்கள் அனைவரும் தங்களது பகுதியில் செயல்பட்டு வரும் நியாய விலைக்கடைகளில் மட்டுமே ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்த நிலையை மாற்ற ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

இதன்படி, நாட்டு மக்கள் அனைவரும் ரேஷன் கார்டு மூலம் தங்களது ஊரில் அல்லாது எந்த நியாய விலை கடைகளிலும் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளமுடியும். இந்த திட்டத்தில் இதுவரை பதினான்கு மாநிலங்கள் இணைய முன்வந்துள்ளன.

இந்த திட்டத்திற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புகளை தெரிவித்தது. மாநில உரிமைகள் இந்த திட்டத்தின் மூலம் பறிக்கப்படும் என கண்டங்கள் எழுந்தன. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு இந்த திட்டத்தில் தமிழகமும் இணையும் என அறிவித்திருக்கிறார்.

Advertisements

Leave a Reply