Home மற்றவை தந்தையை ஏமாற்ற நினைத்து சிக்கிய மகள்

தந்தையை ஏமாற்ற நினைத்து சிக்கிய மகள்

147
0

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு வித்யா என்ற மகளும் விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வித்யா நர்ஸாகப் பணியாற்றி வருகிறார். விக்னேஷ் சிறுசேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். நண்பரின் திருமணத்தில் பங்கேற்பதற்காகத் திருநள்ளாறு செல்வதாக வித்யா குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். திருமணம் முடிந்து காரைக்காலிலிருந்து சென்னைக்கு பஸ் ஏறிவிட்டதாகத் தன் சகோதரர் விக்னேஷ்க்கு போனில் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வந்து அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். விக்னேஷ் அவரது செல்போன்னுக்கு தொடர்புகொள்ள முயன்றுள்ளார். ஸ்விட்ச் ஆஃப் என வந்துள்ளது.

இந்தத் தகவலை விக்னேஷ் தன் தந்தையிடம் தெரிவித்துள்ளார். சிறிது நேரத்தில் ஆறுமுகத்தின் தந்தையின் செல்போனுக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து வித்யாவைக் கடத்தி வைத்திருப்பதாகக் கூறியுள்ளார். 10 லட்சம் கொடுத்தால் உங்கள் மகளை விடுவிப்போம். போலீஸாரிடம் போனால் உங்கள் மகளை உயிருடன் பார்க்க முடியாது எனக் கூறியுள்ளார். ஆறுமுகம் தன் மகனை அழைத்து விவரத்தைக் கூறியுள்ளார். இதற்கிடையில் தொடர்ந்து ஆறுமுகத்திடம் மர்ம நபர் போனில் மிரட்டியுள்ளார். சென்னை கோயம்பேடு வந்து பணத்தைக் கொடுத்தால் உங்கள் மகளை விடுவிப்பேன் என அந்த நபர் கூறியுள்ளார். இதனால் பதறிப்போன ஆறுமுகம் சென்னை கோயம்பேடு காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து இணை கமிஷனர் விஜயகுமாரி மேற்பார்வையில், துணை கமிஷனர் முத்துசாமி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணையில் இறங்கினர். சென்னை கோயம்பேடு பேருந்து நிறுத்தம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராவை போலீஸார் ஆய்வு செய்தனர். வித்யா கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வந்திறங்குவது. அங்கிருந்து கிண்டி செல்லும் மாநகரப் பேருந்தில் ஏறியதும் சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது. இதையடுத்து கிண்டி பேருந்து நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது வித்யா ஒரு இளைஞருடன் புதுச்சேரி செல்லும் அரசுப் பேருந்தில் ஏறுவது தெரியவந்தது. இருவரும் நண்பர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

`உன்னை ஜெயிலுக்கு அனுப்ப நானே காரணமாகிவிட்டேனே’- தந்தையை ஏமாற்ற நினைத்து சிக்கிய மகள்!
செல்போன் சிக்னல் வைத்துதான் இந்த வழக்கில் துப்பு துலக்கியது. அந்த எண் காரைக்காலைச் சேர்ந்த மனோஜ் என்பவரது என்பது தெரியவந்தது. மனோஜ் புதுச்சேரியில் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார் நெருங்குவதை அறிந்த இருவரும் சென்னை வந்துள்ளனர். கோயம்பேட்டில் வைத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் பேசுகையில், “வித்யாவும் பணம் கேட்டு போன் செய்த நபரும் நண்பர்கள் என்பது விசாரணையில் தெரிந்தது. காரைக்காலில் வித்யா படித்துக்கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. மனோஜ் கனடா செல்வதற்காக வித்யாவிடம் பணம் கேட்டுள்ளார். சமீபத்தில் தன் தந்தை விவசாய நிலத்தை விற்றதும் அதன்மூலம் கிடைத்த 13 லட்சத்தை வங்கியில் டெபாசிட் செய்ததை மனோஜிடம் கூறியுள்ளார். இருவரும் கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். சென்னையில் வைத்து இருவரையும் கைது செய்தோம்” என்றனர். சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் இருவரையும் சிறையில் அடைத்தனர்.

மகளிடம் பேசிய ஆறுமுகம், இப்படிச் செய்து நம் குடும்பத்தையும் உன்னையும் சங்கடப்படுத்திவிட்டாயே, உன்னை ஜெயிலுக்கு அனுப்ப நானே காரணமாகிவிட்டேனே என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார். அப்போது போலீஸார் வழக்கின் விவரத்தை ஆறுமுகத்திடம் கூறி நிலைமையைப் புரிய வைத்துள்ளனர். இதையடுத்து தந்தையை ஏமாற்றி பணத்தைப் பறிக்கத் திட்டமிட்ட மகள், போலீஸாரின் 12 மணி நேர தேடுதல் வேட்டையில் சிக்கிக் கொண்டார். இந்த வித்தியாசமான வழக்கு காவல்துறையினருக்கும் ஆறுமுகம் குடும்பத்தினருக்கும் மட்டுமல்ல அனைவருக்கும் ஒரு பாடம் என்றார் காவல்துறை அதிகாரி ஒருவர்.

Advertisements

Leave a Reply