ஸ்வீடிஷ் அகாடமியை உலுக்கிய பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட வேண்டிய நோபல் பரிசு விருது தாமதமானதால் வியாழக்கிழமை 2018 மற்றும் 2019 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு இலக்கியத்துக்கான இரண்டு நோபல் பரிசு வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டன.
2019 ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசை ஆஸ்திரிய எழுத்தாளர் பீட்டர் ஹேண்ட்கே வென்றுள்ளார். 2018 ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு போலந்து எழுத்தாளர் ஓல்கா டோகார்ஸுக்குக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
“மொழியியல் புத்தி கூர்மை மனித அனுபவத்தின் சுற்றளவு மற்றும் தனித்துவத்தை ஆராய்ந்த செல்வாக்குமிக்க படைப்பிற்காக பீட்டர் ஹேண்ட்கேவுக்கு விருது வழங்கப்படுகிறது ” என்று அகாடமி குறிப்பிட்டுள்ளது.
ஹேண்ட்கே “இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் மிகவும் செல்வாக்கு மிக்க எழுத்தாளர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இவரது படைப்புகள் புதிய இலக்கிய வெளிப்பாடுகளைக் கண்டுபிடிப்பதன் மூலம் கண்டுபிடிப்புக்கும் அவரது கண்டுபிடிப்புகளை உயிர்ப்பிப்பதற்கும் ஒரு வலுவான விருப்பம் நிரம்பியுள்ளது.” என்று அகாடமி தெரிவித்துள்ளது. இவர் எ சோரோ பியண்ட் ட்ரீம்ஸ், ஷார்ட் லெட்டர், லாங் பிரியாவிடை போன்ற நாவல்களை எழுதியுள்ளார்.
கலைக்களஞ்சிய ஆர்வத்துடன் எல்லைகளை கடப்பதை ஒரு வாழ்க்கை வடிவமாகக் குறிக்கும் ஒரு புனைகதைக்காக 2018 ஆம் ஆண்டு நோபல் பரிசு ஓல்கா டோகார்ஸுக் வழங்கப்பட்டுள்ளது. இவர் ஃபிளைட்ஸ் நாவலின் ஆசிரியர். மேலும் இவர் கடந்த ஆண்டு மேன் புக்கர் சர்வதேச விருதையும் பெற்றுள்ளார்.
நூற்றாண்டுக்கும் மேலாக வழங்கப்பட்டு வரும் இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்ற 15வது பெண் எழுத்தாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஓல்கா டோகார்ஸுக். இதற்கு முன்பு தொடர்ந்து 11 இலக்கியத்துக்கான நோபல் பரிசுகளை ஆண் எழுத்தாளர்களே வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த நோபல் பரிசை வழங்குவதையும் வெற்றியாளரைத் தேர்ந்தெடுப்பதையும் ஸ்வீடிஷ் அகாடமி நிறுத்தியதாக அறிவித்த பின்னர் 2018 ஆம் ஆண்டு நோபல் பரிசு இல்லை என்றானது. பாலியல் துஷ்பிரயோகம், நிதி முறைகேடு, ஊழல் மற்றும் மூடிமறைப்பு குற்றச்சாட்டுகளால் ஸ்வீடிஷ் அகாடமி பாதிக்கப்பட்டதால் அறக்கட்டளை நடவடிக்கை எடுத்தது.
2017 ஆம் ஆண்டில் மி டூ பிரச்சாரத்தின்போது, 18 பெண்கள் பிரெஞ்சு-ஸ்வீடிஷ் புகைப்படக் கலைஞரும், ஸ்வீடனின் முன்னணி கலாச்சார பிரமுகர்களில் ஒருவருமான ஜீன்-கிளாட் அர்னால்ட், 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக குற்றம் சாட்டினர். அர்னால்ட் செல்வாக்குமிக்க ஸ்வீடிஷ் கவிஞரும் எழுத்தாளருமான கட்டரினா ஃப்ரோஸ்டென்சனை மணந்தார். அவர் அப்போது ஸ்வீடிஷ் அகாடமியின் நீண்டகால உறுப்பினராக இருந்தார்.
1786 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் முன்னர் ஏழு சந்தர்ப்பங்களில் பரிசை தேர்வு செய்வதை ஒத்திவைத்துள்ளது. 1915, 1919, 1925, 1926, 1927, 1936 மற்றும் 1949 ஆம் ஆண்டுகளில் எந்தவொரு இலக்கிய வேட்பாளரும் பரிசுக்கு தகுதியானவர் என்று கருதப்படவில்லை என்றது.
மூன்று விஞ்ஞானிகள் லித்தியம் அயன் பேட்டரிகளின் வளர்ச்சிக்கு வழிவகுத்த முன்னோடி பணிக்காக புதன்கிழமை வேதியியலில் நோபல் பரிசு வென்றனர். செவ்வாய்க்கிழமை இயற்பியலுக்கான நோபல் பரிசு கனேடிய-அமெரிக்கர் மற்றும் இரண்டு சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவர்களுகு வழங்கப்பட்டது. திங்கள் கிழமை உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசு இரண்டு அமெரிக்கர்களுக்கும் ஒரு பிரிட்டிஷ் விஞ்ஞானிக்கும் வழங்கப்பட்டது.