உலகிலேயே மிக உயரமான எவரஸ்ட் சிகரம் நேபாள நாட்டில் அமைந்துள்ளது. இந்த சிகரம் கடல் மட்டத்துக்கு மேல் 8,848 மீட்டர் உயரம் உள்ளதாக 1954-ஆம் ஆண்டு மேற்கொண்ட கணக்கீட்டின்படி அறிவிக்கப்பட்டது.
கடந்த 2015-ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் எவரஸ்ட் சிகரத்தின் உயரம் மாறியுள்ளதாக தகவல் வெளியானது.
எவரெஸ்ட் பயணத்திற்குத் தயாராவதற்கு முன் நேபாளத்தின் கணக்கெடுப்புத் துறை 2017 ஆம் ஆண்டில் இதன் உயரைத்தை கணக்கிட சர்வேயர்கள் குழுவை நியமித்தது.
இந்த நிலையில் சீன அதிபர் ஜின்பிங் இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி நேபாள நாட்டிற்கு சென்றார்.
அந்நாட்டின் பிரதமர் கேபிஷர்மா ஒலி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் பருவகால மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கூட்டாக ஒத்துழைப்பதற்கு ஒப்பந்தத்தை மேற்கொண்டனர்.
நேபாளத்துக்கு அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.5,600 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என்று அதிபர் ஜின்பிங் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.