Home செய்திகள் உலக செய்திகள் பிரதமர் மோடிக்கு அரபு நாட்டின் விருது!

பிரதமர் மோடிக்கு அரபு நாட்டின் விருது!

263
0

அபுதாபியில் நடந்த நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு அமீரக பட்டத்து இளவரசர் முகமது பின் சயத் அல்நயன் விருதினை நரேந்திர மோடிக்கு வழங்கினார். அதனைத் தொடர்ந்து இரு நாட்டு அதிகாரிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது. வர்த்தகத்தை மேம்படுத்துவது தொடர்பாக அந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. முன்னதாக அங்குள்ள இந்திய தொழிலதிபர்களையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.

இந்தியாவில் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்தி தொழில் தொடங்க வருமாறு அவர் அழைப்பு விடுத்தார். இந்தியாவும் சவுதி அரேபியாவும் இருதரப்பு வர்த்தகத்தைப் பெருக்கிக் கொள்ள ஏரளமான வாய்ப்புகள் உள்ளதாகக் குறிப்பிட்ட மோடி, ஏற்றுமதி, இறக்குமதி என்பதைத் தாண்டி உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். அங்கே, வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபர்களுடன் மோடி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

Advertisements

Leave a Reply