கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட தேசிய கவுன்சிலின் முதல் கூட்டம் உத்திரபிரதேசம் கான்பூரில் கடந்த 14-ம் தேதி நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி கூட்டம் முடிந்து கங்கை நதியில் படகுப் பயணம் செய்து திரும்பிய பின்னர் படி ஏறும்போது சீரற்ற படியால் கால் தடுமாறி கீழே விழுந்தார்.
உடனே அவருடன் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரைப் பிடித்து உதவி செய்தனர். இதில் அவருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.இந்நிலையில் அந்தப் படிகட்டுகளை இடித்துவிட்டுக் சீரமைக்க உத்திரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
Advertisements