Home விளையாட்டு பிற விளையாட்டு தேசிய பளுதூக்குதல் மீராபாய் சானு சாதனை

தேசிய பளுதூக்குதல் மீராபாய் சானு சாதனை

107
0

தேசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி கொல்கத்தாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 49 கிலோ உடல் எடைப்பிரிவில் 25 வயதான மணிப்பூர் வீராங்கனை மீராபாய் சானு ‘ஸ்னாட்ச்’ முறையில் 88 கிலோவும், ‘கிளன் அண்ட் ஜெர்க்’ முறையில் 115 கிலோவும் என மொத்தம் 203 கிலோ எடை தூக்கி புதிய தேசிய சாதனை படைத்தார்.

இதற்கு முன்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தாய்லாந்தில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் 201 கிலோ எடை தூக்கியதே தேசிய சாதனையாக இருந்தது.

மீராபாய் சானு தனது சொந்த சாதனையை நேற்று தகர்த்து புதிய சாதனை படைத்தார். அவர் 2017-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று இருந்தார். 203 கிலோ எடை தூக்கியதன் மூலம் மீராபாய் சானு உலக தரவரிசையில் 4-வது இடத்தை பிடித்தார்.

Advertisements

Leave a Reply