Home செய்திகள் மேட்டுப்பாளையத்தில் சாய்ந்து விழுந்ததில் – வீடுகள் இடிந்து 17 பேர் பலி

மேட்டுப்பாளையத்தில் சாய்ந்து விழுந்ததில் – வீடுகள் இடிந்து 17 பேர் பலி

146
0

கோவை மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வீடுகள் ஈரப்பதத்துடன் உள்ளன. இ்ந்தநிலையில் மேட்டுப்பாளையத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை விடிய,விடிய பலத்த மழை பெய்தது.

ஒரே நாள் இரவில் 18 சென்டிமீட்டர் மழை கொட்டிதீர்த்தது. இதனால் மேட்டுப்பாளையம் முழுவதும் வெள்ளக்காடானது.

மேட்டு்ப்பாளையம் நடூர் ஏ.டி.காலனியில் ஏராளமானோர் குடியிருந்து வருகிறார்கள். இங்கு வரிசையாக ஓட்டு வீடுகள் உள்ளன.

குடியிருப்புகளுக்கு அருகில் மேட்டுப்பாளையத்தில் சக்கரவர்த்தி என்ற பெயரில் ஜவுளிக்கடை நடத்தி வரும் உரிமையாளர் சிவசுப்பிரமணியன் என்பவரது பங்களா வீடு உள்ளது. இந்த வீட்டின் 15 அடி உயர தடுப்பு சுவர் மழையின் காரணமாக ஈரப்பதத்துடன் இருந்தது.

பலத்த மழை காரணமாக மேடான பகுதியில் இருந்து மழைநீர் குடியிருப்பை நோக்கி பெருக்கெடுத்து வந்தது. அப்போது வீடுகளுக்குள் அனைவரும் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தனர்.

மழையால் ஏற்கனவே ஈரப்பதத்துடன் இருந்த அந்த 15 அடி உயர சுவர், வெள்ள நீர் சூழ்ந்ததால், அதிகாலை 3.30 மணியளவில் திடீரென்று சாய்ந்து, அருகில் இருந்த ஓட்டு வீடுகள் மீது விழுந்து அமுக்கியது.

இதனால் அந்த வீடுகள் இடிந்து விழுந்தன. வீடுகளில் தூங்கிக்கொண்டு இருந்தவர்கள், தங்களை காப்பாற்றக்கோரி கூக்குரல் எழுப்புவதற்குள் இடிபாடுகளுக்குள் சிக்கி புதைந்தனர்.

இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடியவர்கள் வெளியே வரமுடியாததால் தூக்கத்திலேயே உயிர் பிரிந்தது.

அப்போது தோண்ட, தோண்ட இறந்தவர்களின் உடல்கள் வெளியே வந்தன. கொட்டும் மழையிலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்தது. விபத்தில் பலியான 17 பேரின் உடல்களும் நீண்ட நேரத்துக்கு பின்னர் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

பலியானவர்களில் 11 பெண்களும், 3 ஆண்களும், 3 குழந்தைகளும் ஆவார்கள்.

இறந்தவர்கள் பெயர் விவரம் :-

1.ஆனந்தகுமார்(வயது45).

2.நதியா(30),

3.அக்சயா(7).

4.லோகுராம்(7).

5.ஹரிசுதா(வயது16),

6.மகாலட்சுமி(10),

7.சிவகாமி(45),

8.ஓவியம்மாள்(50), ,

9.வைதேகி(20),

10.திலகவதி(50),

11,அருக்காணி(55),

12.ருக்மணி(40),

13,நிவேதா(18),

14.சின்னம்மாள்(70),

15.மங்களம்மாள்(60),

16.குருசாமி(45),

17.ராமநாதன்(20),

மீட்கப்பட்ட உடல்கள் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பலியானவர்களின் உறவினர்கள் திரண்டு இருந்ததால் ஆஸ்பத்திரி முழுவதும் கூட்டம் அலைமோதியது.

Advertisements

Leave a Reply