Home பயணம் ராமேஸ்வரத்திலிருந்து அருகிலிருக்கும் கச்சத்தீவு

ராமேஸ்வரத்திலிருந்து அருகிலிருக்கும் கச்சத்தீவு

164
0

ராமேஸ்வரத்துக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் அமைந்துள்ளது இந்த தீவு. இந்த தீவு சரித்திர புகழ் வாய்ந்தது. இது இந்தியா இலங்கை இடையே அமைந்துள்ளதாலும், இரு நாடுகளுக்கிடையே அடிக்கடி பிரச்னைகளும் எழும். இந்நிலையில் தான் இந்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது. இந்த தீவுக்கு அருகாமையில் நிறைய தீவுக்கூட்டங்கள் காணப்படுகின்றன.

ராமேஸ்வரத்துக்கு அருகாமையில் நிறைய தீவுகள் காணப்படுகின்றன. நல்லத்தண்ணி தீவு, அணைப்பார் தீவு, வலிமுனைத் தீவு, புள்ளிவாசல் தீவு, குருசடை தீவு, ஷிங்கிள் தீவு, டெல்ப்ட் தீவு, காக்கரடிவ் தீவு, பழைத் தீவு என நிறையத் தீவுகள் காணப்படுகின்றன.

தனுஷ்கோடி தீவின் கடைசி முனைதான் இந்த தனுஷ்கோடி முனை ஆகும். புகைப்படங்கள் எடுக்க விரும்புவோருக்கு மிகச் சிறந்த வரப்பிரசாதமாக இருக்கும் இது. 1964’ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட புயல் காரணமாக ஆழிப் பேரலைகள் தனுஷ்கோடி நகரத்தை மூழ்கடித்தது.

தனுஷ்கோடியையும் பாம்பனையும் இணைக்கும் இருப்புப்பாதை புயலில் அடித்துச் செல்லப்பட்டது. அதன்பிறகு மாறியதுதான் நாம் இப்போது பார்க்கும் தனுஷ்கோடி.

ராமேஸ்வரத்தில் இருந்து 20 கி.மீ தொலைவில் இந்நகரம் அமைந்திருக்கிறது. இலங்கையின் தலைமன்னாரில் இருந்து 30 கி.மீ தொலைவில் இருக்கிறது.

Advertisements

Leave a Reply