Home செய்திகள் குண்டலுபேட்டையில் 2 பேரை கொன்ற புலி பிடிபட்டது

குண்டலுபேட்டையில் 2 பேரை கொன்ற புலி பிடிபட்டது

157
0

சாம்ராஜ் நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா பந்திப்பூரில் புலிகள் பாதுகாப்பு சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயத்திற்கு உட்பட்டது கோபாலசாமி மலைவனப்பகுதி. இந்த வனப்பகுதியையொட்டி சவுட ஹள்ளி, உண்டிபுரா மற்றும் அதனை சுற்றி ஏராள மானகிரா மங்கள் உள்ளன. இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக வனப்பகுதியில் இருந்து ஒரு புலி வெளியேறி கிராமங்களில் புகுந்து கால்நடைகளை அடித்து கொன்று அட்டகாசம் செய்து வந்தது.

மேலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உண்டிபுரா பகுதியை சேர்ந்த ஒரு விவசாயியை புலி அடித்து கொன்று இருந்தது. இதனால் கிராம மக்கள் பீதி அடைந்தனர். மேலும் அந்த புலியை பிடிக்க உண்டிபுரா கிராமத்தில் வனத்துறையினர் கூண்டு வைத்தனர். கும்கிகள் உதவியுடன் புலியை தேடிப் பார்த்தனர். ஆனால் அந்த புலி வனத்துறையினர் கண்களில் சிக்கவில்லை. இதனால் அந்த புலி வனப்பகுதிக்குள் சென்று விட்டது என்று கூறி புலியை பிடிக்கும் முயற்சிைய வனத்துறையினர் கைவிட்டு விட்டனர்.

இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய அந்த புலி, சவுட ஹள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயியான சிவலிங்கப்பா என்பவரை அடித்து கொன்றது. இதனால் அந்த புலியை உடனடியாக பிடிக்க வேண்டும் என்று கிராமமக்கள் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து தசரா ஊர்வலத்தில் கலந்து கொண்ட அபி மன்யு, கோபாலசாமி, ஜெயபிரகாஷ் உள்பட 7 கும்கிகள் உண்டிபுராவுக்கு அழைத்து வரப்பட்டன. அந்த கும்கிகள் உதவியுடன் புலியை வனத்துறையினர் 6 குழுக்களாக பிரிந்து புலியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் வனப்பகுதியில் பறக்கும் கேமராக்கள் மூலம் புலியின் நடமாட்டமும் கண்காணிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் மேலுகாமன ஹள்ளி பகுதியில் ஒரு புதரில் புலி பதுங்கி இருப்பதாக வனத்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு வனத்துறையினர் விரைந்து சென்றனர். அப்போது அங்கு புதரில் புலி பதுங்கி இருந்ததை வனத்துறையினர் பார்த்தனர்.

பின்னர் கால்நடை மருத்துவர் துப்பாக்கி மூலம் புலியின் உடலின் மீது மயக்க ஊசியை செலுத்தினார். இதில் அந்த புலி மயங்கியது. இதனை தொடர்ந்து அந்த புலியை வலை போட்டு வனத் துறையினர் பிடித்தனர். மேலும் அந்த புலியை கூண் டில் ஏற்றி லாரி மூலம் கொண்டு சென்றனர். 2 பேரை கொன்ற புலி சிக்கியதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Advertisements

Leave a Reply