Home செய்திகள் ‘கிருஷி சம்மான்’ – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

‘கிருஷி சம்மான்’ – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

185
0

மத்திய அரசின் வேளாண்மை துறை சார்பில் சாதனை படைத்த 28 விவசாயிகளுக்கு ‘கிருஷி கர்மான் விருது வழங்கும் விழா தும்கூருவில் உள்ள ஜூனியர் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சாதனை படைத்த விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கினார். மேலும் நேற்று ஒரே நாளில் மட்டும் 6 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.12 ஆயிரம் கோடி வரவு வைக்கும் கிருஷி சம்மான் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.

‘கிருஷி சம்மான்’ திட்டத்தில் 8 கோடி விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 6 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.12 ஆயிரம் கோடி வரவு வைக்கப்பட்டு உள்ளது.

விவசாயிகளின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த நீர்ப்பாசன திட்டங்கள் மற்றும் விவசாயம் தொடர்பான திட்டங்களை நிறைவேற்ற நாங்கள் முன்னுரிமை அளித்துள்ளோம். குறைந்தபட்ச ஆதரவு விலையை 1½ மடங்கு உயர்த்தி இருக்கிறோம்.

கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு, தெலுங்கானாவில் தோட்டக்கலை விளைபொருட்கள் ஏற்றுமதியை ஊக்கப்படுத்த அதற்கான பதப்படுத்தும் மையத்தை அமைக்க முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு மோடி பேசினார்.

Advertisements

Leave a Reply