Home செய்திகள் காமராஜர் மணிமண்டபம் மார்ச் மாதம் திறக்கப்படும்

காமராஜர் மணிமண்டபம் மார்ச் மாதம் திறக்கப்படும்

192
0

காமராஜர் மணிமண்டபம் மார்ச் மாதம் திறக்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். காமராஜர் மணிமண்டபம் அமைக்கும் பணி அனைத்தும் முடிவடைந்து விட்டது.

வருகிற மார்ச் மாதம் அந்த கட்டிடம் திறக்கப்படும். அதில் புதுவை அரசு சார்பில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் மற்றும் நூலகம் அமைக்கப்படும். நான் புதுவை மாநில முதல்-அமைச்சராக பொறுப்பேற்கும் முன்பு சட்டம்-ஒழுங்கு மோசமாக இருந்தது. வியாபாரிகள், தொழிலதிபர்கள், கடை வைத்திருப்பவர்களை மிரட்டி ரவுடிகள் பணம் பறித்து வந்தனர்.

முதல்-அமைச்சராக பொறுப்பேற்றவுடன் காவல்துறை தலைவரை அழைத்து வியாபாரிகளை மிரட்டி பணம் பறிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன். அதன்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே தற்போது புதுவை அமைதியாக உள்ளது.

Advertisements

Leave a Reply