Home சினிமா இந்தியன்-2 படப்பிடிப்பில் கமல்

இந்தியன்-2 படப்பிடிப்பில் கமல்

126
0

இந்தியன்-2 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடங்கினர். பின்னர் ஐதராபாத்திலும், ராஜமுந்திரி சிறைச்சாலையிலும் முக்கிய காட்சிகளை படமாக்கினர். அதன்பிறகு போபாலில் படப்பிடிப்பு நடந்தது. 2 ஆயிரம் துணை நடிகர்களுடன் பிரமாண்ட சண்டை காட்சியை அங்கு படமாக்கினர்.

கமல்ஹாசன் 90 வயது முதியவராக வந்து வர்ம கலையால் வில்லன்களுடன் மோதுவதுபோன்ற காட்சிகளை படமாக்கினர். அப்போது கமல்ஹாசனின் வயதான தோற்றத்தை யாரோ செல்போனில் படம்பிடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு ஆஸ்பத்திரியில் காலில் சிறிய அறுவை சிகிச்சை நடந்ததாலும், அறுவை சிகிச்சைக்கு பிறகு தொடர்ந்து ஓய்வு எடுத்ததாலும் இந்தியன்-2 படப்பிடிப்பில் தடங்கல் ஏற்பட்டு நிறுத்தி வைத்தனர். தற்போது கமல்ஹாசன் பூரண குணமடைந்து படப்பிடிப்புக்கு மீண்டும் தயாராகி உள்ளார்.

Advertisements

Leave a Reply