Home ஆன்மிகம் இந்த தூண் விழும்போது உலகம் அழிந்துவிடும்

இந்த தூண் விழும்போது உலகம் அழிந்துவிடும்

296
0

ஹரிஷ் சந்திரேஸ்வரர் சிவன் குகை கோயில் மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கிறது. ஆறாம் நூற்றாண்டில் கலாசூரி என்னும் மன்னனால் கட்டப்பட்ட கோவில் தான் இந்த ஹரிஸ் சந்திரேஸ்வரர் கோவில். இதற்கு மிக அருகிலேயே கேதாரேஸ்வரர் என்னும் குகை ஒன்று இருக்கிறது.

இந்த குகை மற்ற குகைகளைப் போல அல்ல. தண்ணீர் நிறைய இருக்கும். அந்த நீருக்கு நடுவே ஐந்தடி உயரத்தில் கம்பீரமாக ஒரு சிவலிங்கம் வீற்றிருக்கிறது. இந்த லிங்கத்தைச் சுற்றியிருக்கிற தண்ணீர் ஐஸ் கட்டியைப் போல மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். இந்த தண்ணீரின் குளிரைத் தாண்டி சிவலிங்கத்தின் அருகில் சென்று வணங்குவது கொஞ்சம் கடினம். குறிப்பாக மழைக்காலங்களில் எல்லாம் இந்த குகைக் கோவிலுக்குள் செல்வது முடியாது.

இந்த குகைக்குள் இருக்கிற சிவலிங்கத்தைச் சுற்றி நான்கு தூண்கள் அமைந்திருக்கின்றன. இந்த நான்கு தூண்களும் நான்கு யுகங்களைக் குறிக்கிறது.

1.சத்ய யுகம்
2.த்ரேத யுகம்
3.த்வாபர யுகம்
4.கலியுகம்

சத்ய யுகம், த்ரேத யுகம், த்வாபர யுகம், கலியுகம் என்னும் நான்கின் அடையாளமாகத் தான் அந்த நான்கு தூண்கள் அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு யுகம் முடிவடையும் போதும், ஒவ்வொரு தூணாக கீழே விழும் என்பது நியதி. அதன்படி ஏற்கனவே மூன்று தூண்கள் வெவ்வேறு காலக்கட்டங்களில் விழுந்து விட்டன. இன்னும் ஒரே ஒரு தூண் மட்டுமே மிச்சமிருக்கிறது. அந்த தூண் தான் கலியுகத்தைக் குறிக்கும் தூணாகும். இந்த தூண் விழும் நாள் தான் கலியுகத்தின் கடைசி நாளாக இருக்குமாம். அதாவது உலகம் அழியும் நாள். அந்த நான்காம் தூண் தான் இந்த பிரபஞ்சத்தையே தாங்கிக் கொண்டிருக்கிறதாம்.

Advertisements

Leave a Reply