Home செய்திகள் பிரதமர் மோடி மீது தாக்குதல்

பிரதமர் மோடி மீது தாக்குதல்

135
0

உரி பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்பு பாகிஸ்தான் கட்டுக்குள் உட்பட்ட பகுதிக்குள் சென்று இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது. இதன்பின்பு, ஜெய்ஷ் இ முகமது இயக்க முகாம்கள் மீது பாலகோட் பகுதியில் நடந்த இந்திய விமான படையின் தாக்குதல்கள் ஆகிய பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளால் மத்திய அரசு மீது ஜெய்ஷ் இ முகமது இயக்கம் பதிலடி கொடுக்கும் முனைப்பில் இருந்தது. இந்த நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தோவலுக்கு அச்சுறுத்தல் எழுந்தது.

இதனிடையே, பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தினை சேர்ந்த ஷம்ஷெர் வானி மற்றும் அவனது கூட்டாளிக்கு இடையேயான கையால் எழுதப்பட்ட குறிப்புகள் கொண்ட தகவல் பரிமாற்றங்களை வெளிநாட்டு உளவு அமைப்பு ஒன்று இடைமறித்து அறிந்தது.

இதில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு பிரிவு 370ஐ மத்திய அரசு நீக்கியதற்கு பதிலடியாக பிரதமர் மோடி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் மீது தாக்குதல் நடத்துவது என திட்டமிட்டது தெரிய வந்தது.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பு ஐ.எஸ்.ஐ.யானது துணையாக செயல்பட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது. இந்த செப்டம்பரில் மிக பெரிய பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் பற்றி அவர்கள் பேசி கொண்டதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதுபற்றி ஜம்மு, பதன்கோட், ஜெய்ப்பூர், அமிர்தசரஸ், கான்பூர் மற்றும் லக்னோ உள்ளிட்ட 30 நகரங்களில் உள்ள போலீசாருக்கு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனை அடுத்து தோவலின் பாதுகாப்பு விவரம் பற்றி பாதுகாப்பு முகமைகள் மீண்டும் ஆய்வு செய்துள்ளன. இதேபோன்று காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த பிப்ரவரியில் நடந்த பயங்கரவாத தாக்குதலை போன்று தற்கொலை தீவிரவாதி ஒருவனை இந்திய எல்லை பகுதியில் தாக்குதல் நடத்த அனுப்புவதற்கு, ஜெய்ஷ் இ முகமது இயக்கம் முயற்சி செய்து வருகிறது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஹாஜிபீர் பிரிவில் கடந்த 12 மற்றும் 13ந்தேதி இரவில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் குழுவை தடுத்து நிறுத்தி அவர்களது முயற்சியை இந்திய பாதுகாப்பு படையினர் முறியடித்தனர்.

Advertisements

Leave a Reply