Home விளையாட்டு கால்பந்து சென்னை-ஒடிசா கால்பந்து ஆட்டம் ‘டிரா’

சென்னை-ஒடிசா கால்பந்து ஆட்டம் ‘டிரா’

215
0

சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 26-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, ஒடிசா எப்.சி.யுடன் மோதியது. ஆக்ரோஷமாக ஆடிய இரு அணி வீரர்களும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டினர். முதல் பாதியில் யாரும் கோல் அடிக்கவில்லை.

பிற்பாதியில் 51-வது நிமிடத்தில் சென்னை வீரர் வல்ஸ்கிஸ் கோல் அடித்து உள்ளூர் ரசிகர்களை உற்சாகத்தில் மிதக்க வைத்தார். ஆனால் இந்த மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. 54-வது நிமிடத்தில் ஒடிசா வீரர் ஸிஸ்கோ பதில் கோல் திருப்பினார்.

71-வது நிமிடத்தில் வல்ஸ்கிஸ் தலையால் முட்டி மறுபடியும் அருமையாக கோல் போட்டார். இந்த முன்னிலையையும் சென்னை அணி தக்க வைத்துக் கொள்ள தவறியது. 82-வது நிமிடத்தில் ஒடிசா வீரர் அரிடான் கோல் அடித்து ஆட்டத்தை மீண்டும் சமனுக்கு கொண்டு வந்தார்.

Advertisements

Leave a Reply