Home விளையாட்டு பிற விளையாட்டு இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

42
0

தென்ஆப்பிரிக்காவில் உள்ள போட்செஸ்ட்ரூமில் சர்வதேச தடகள போட்டி (ஏ.சி.என்.இ. லீக் ) நடந்தது. ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி சுற்றாக கணக்கில் கொள்ளப்பட்ட இந்த போட்டியில் வலது முழங்கையில் ஏற்பட்ட காயத்துக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆபரேஷன் செய்ததால் பெரிய போட்டி எதிலும் பங்கேற்காமல் இருந்து வந்த இந்திய இளம் தடகள வீரர் நீரஜ் சோப்ரா களம் கண்டார். 2018-ம் ஆண்டு ஜகர்தாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பிறகு அவர் கலந்து கொண்ட முதல் போட்டி இதுவாகும்.

இதில் ஈட்டி எறிதலில் 22 வயதான இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தனது 4-வது முயற்சியில் 87.86 மீட்டர் தூரம் வீசி தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் அவர் வருகிற ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பந்தயத்துக்கு தகுதி பெற குறைந்தபட்சம் 85 மீட்டர் தூரம் வீச வேண்டும் என்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரரான ரோகித் யாதவ் 77.61 மீட்டர் தூரம் வீசி 2-வது இடம் பிடித்தார்.

நீரஜ் சோப்ரா வெற்றியின் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தடகளத்தில் இந்தியாவுக்கு 4-வது வாய்ப்பு கிடைத்துள்ளது.

Advertisements

Leave a Reply