Home செய்திகள் உலக செய்திகள் குளத்தில் மிதந்த இந்திய மாணவி அமெரிக்காவில் சடலமாக மீட்பு

குளத்தில் மிதந்த இந்திய மாணவி அமெரிக்காவில் சடலமாக மீட்பு

175
0

கேரளாவை சேர்ந்தவர் ஆன் ரோஸ் ஜெர்ரி (21). இவர் அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தில் உள்ள நோட்ரே டேம் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.

இவருடைய அப்பா சாப்ட்வேன் என்ஜினியர் என்பதால், பணிநிமித்தமாக அமெரிக்காவிலேயே 2000-ம் வருடம் குடும்பத்தோடு போய் செட்டில் ஆகிவிட்டனர். ஆன்ரோஸ் கடந்த 21-ம் தேதியில் இருந்து காணவில்லை.

இந்த நிலையில், ஆன்ரோஸ் உடல் பல்கலைக்கழகத்தில் உள்ள ஏரியில் இருந்து மீட்கப்பட்டுள்லது. அவர் உடலில் காயங்கள் ஏதுமில்லாததால் இது ஒரு விபத்து என்றே போலீசார் கருதுகின்றனர்.

இசையின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஆன்ரோஸ் பியானோ வாசிப்பதில் சிறந்து விளங்கியதோடு மிகவும் புத்திசாலியான மாணவி என்றும் பெயரெடுத்தவர்.

அவரது மரணம் சக மாணவர்களை அதிர்ச்சிக்கும் சோகத்துக்கும் ஆளாக்கியுள்ளது. இதனிடையில் ஆன்ரோஸ் ஒரு புத்திசாலித்தனமான பெண்ணாவார் என பல்கலைக்கழகம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடலில் எந்த காயங்களும் இல்லை. அதனால் பல்கலைக்கழகத்தில் உடற்பயிற்சி செய்தபோது, தவறி ஏரியில் விழுந்திருக்கலாம் என்று சந்தேகம் இதுதொடா்பாக தொடா்ந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisements

Leave a Reply