Home விளையாட்டு பிற விளையாட்டு உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் மீண்டும் தங்கம் வென்று இந்திய வீராங்கனை சாதனை

உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் மீண்டும் தங்கம் வென்று இந்திய வீராங்கனை சாதனை

221
0

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி பிரேசில் தலைநகர் ரியோடி ஜெனீரோவில் நடந்து வருகிறது. இதில் ஆகஸ்ட் 27-ம் தேதி நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பந்தயத்தில் இந்தியாவின் இளவேனில் வாலறிவன், யஷாஸ்வினி சிங் தேஸ்வால், அபூர்வி சண்டிலா, அஞ்சும் மோட்ஜில், உள்பட 109 வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இதில் இறுதி சுற்றில் இந்திய இளம் புயல் இளவேனில் குறிதவறாமல் சுட்டு மொத்தம் 251.7 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை வென்று பிரமிப்பூட்டினார்.
இதையடுத்து, உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்ற 3-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை 22 வயதான யஷாஸ்வினி சிங் தேஸ்வால் பெற்று இருக்கிறார். அரியானா மாநிலத்தை சார்ந்த யஷாஸ்வினி பொருளாதார மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜூனியர் உலக சாம்பியனான யஷாஸ்வினி, பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டி சீசனின் 4-வது ஐ.எஸ்.எஸ்.எஃப் உலக கோப்பையில் எட்டு பெண்கள் கலந்து கொண்ட இறுதி சுற்றில் 236.7 புள்ளிகளை பதிவு செய்து, இந்தியாவுக்கான 9-வது ஒலிம்பிக் ஒதுக்கீட்டை பெற்றுள்ளார்.
டோக்கியோவில் நடைபெற உள்ள 2020 ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள யஷாஸ்வினி உட்பட சஞ்சீவ் ராஜ்புத், அஞ்சும் மோட்ஜில், அபூர்வி சண்டிலா, சயுரப் சவுத்ரி, அபிஷேக் வர்மா, திவ்யான்ஷ் சிங் பன்வார், ரஹி சர்னோபத் மற்றும் மனு பேக்கர் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
ரியோ ஒலிம்பிக்கில், ஆண்கள் 10 மீ ஏர் பிஸ்டல் மற்றும் பெண்கள் 10 மீ ஏர் ரைபிள் ஆகிய போட்டிகளில் முறையே தங்கம் வென்ற அபிஷேக் வர்மா மற்றும் இளவேனில் வாலறிவனை தொடர்ந்து இது ரியோவில் இந்தியா வென்ற மூன்றாவது தங்கமாகும்.
இந்த வாரத்தில் மட்டும், உலக பேட்மிண்டனில் மகுடம் சூடிய முதல் இந்தியர் பி.வி. சிந்து மற்றும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இளவேனில் வாலறிவன் மற்றும் யஷாஸ்வினி சிங் தேஸ்வால் ஆகிய மூன்று இந்திய வீராங்கனைகள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply