Home விளையாட்டு கிரிக்கெட் 20 ஓவர் கிரிக்கெட் தொடர்: போட்டி அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ

20 ஓவர் கிரிக்கெட் தொடர்: போட்டி அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ

147
0

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்த நிலையில், இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகிற 2-ந்தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.

இதனையடுத்து, இலங்கை அணி வரும் 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. பிசிசிஐ தற்போது இந்த போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. இப்போட்டிகளானது ஜனவரி 5 முதல் 10 ஆம் தேதி வரை நடைபெறும்.

அதன்படி முதல் போட்டி ஜனவரி 5-ந் தேதி கவுகாத்தியிலும், 2-வது போட்டி ஜனவரி 7-ந் தேதி இந்தூரிலும், 3-வது போட்டி ஜனவரி 10-ந் தேதி புனேவிலும் நடைபெற உள்ளது.

Advertisements

Leave a Reply