Home சினிமா நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

123
0

நடிகர் விஜய் வீட்டில் 2 ஆவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடு, அலுவலகங்களிலும் மற்றும் ஏ.ஜி.எஸ் குழுமத்துக்கு சொந்தமான இடங்களிலும் 2 ஆவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.

இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் வருமான வரித்துறை அதிகாரிகள், நேற்று பிற்பகல் 2 மணி அளவில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தனர். அப்போது நடிகர் விஜ​யிடம் , பிகில் படத்தில் பெற்ற ஊதியம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று சம்மன் கொடுத்தனர். கொடுத்ததும் இல்லாமல், கையோடவே, நடிகர் விஜயை காரில் அழைத்து சென்றனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். படப்பிடிப்பும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

அப்போது ஏ.ஜி.எஸ். நிறுவனத்திடம் நடிகர் விஜய்க்கு பிகில் படத்தில் நடித்ததற்காக எவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டது என்று கேள்வி எழுப்பபட்டது. இது குறித்து தகவல் பெறவும், நடிகர் விஜய் பெற்ற தொகைக்கான வரியை செலுத்தினாரா என்பது குறித்து ஆராயவுமே விஜய்யிடம் இந்த விசாரணை என தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அவருக்கு சொந்தமான சாலிக்கிராமம் வீடு, பனையூரில் உள்ள பண்ணை வீடு ஆகிய இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் விடிய விடிய சோதனை மேற்கொண்டனர்.

Advertisements

Leave a Reply