Home செய்திகள் மே 1-ந் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

மே 1-ந் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

33
0

மராட்டியத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதித்து கடந்த 2018-ம் ஆண்டு அரசு உத்தரவு பிறப்பித்தது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி விட்டு வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் ஒழிக்க சுற்றுச்சூழல் துறை மந்திரி ஆதித்ய தாக்கரே தீவிரம் காட்டி உள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி கமிஷனர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது ஒருமுறை பயன்படுத்தி விட்டு வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதற்கான செயல்திட்டத்தை வருகிற 20-ந் தேதிக்குள் சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டார்.

Advertisements

Leave a Reply