Home உணவு இட்லி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

இட்லி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

152
0

தென்னிந்திய உணவான இட்லியானது அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை ஊற வைத்து அரைத்து நொதிக்கச் செய்து பின் வேக வைத்து சாப்பிடுவதால், இதில் கார்ப்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் அதிகம் உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.

இட்லி மாவை நொதிக்க வைக்கும் முறையினால், அதில் புரதங்களின் இருப்புத்தன்மை அதிகமாகும் மற்றும் வைட்டமின் பி சத்தின் அளவு மேம்பட்டு இருக்கும். உடல் வலிமை அதிகமாகும் உடல் வலிமையை அதிகரிக்கும் உளுத்தம் பருப்பு பயன்படுத்தி இட்லி செய்வதால், இதனை காலை வேளையில் உணவாக எடுத்து வந்தால், நாள் முழுவதும் உடல் வலிமையுடனும், சுறுசுறுப்புடனும் செயல்பட முடியும்.

கொழுப்புக்கள் குறைவு வேக வைக்கும் முறையில் சமைக்கப்படும் இட்லியில் கொழுப்புக்கள் சுத்தமாக இருக்காது. இதனால் உடலில் தேவையற்ற கொழுப்புக்கள் சேர்வதைத் தடுக்கலாம். செல்கள் புதுப்பிக்கப்படும் உடலினுள் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள செல்களை பழுது பார்த்து புதுப்பிக்கும் லைசின் என்னும் அமினோ அமிலாம் இட்லியில் மூன்று மடங்கு அதிகமாக உள்ளது.

1.காலையில் மற்ற உணவுகளை விட இட்லியை உட்கொண்டால், செரிமான மண்டலத்தினால் எளிதில் செரிக்கப்படும். இதனால் செரிமான மண்டலம் சீராக இயங்கும்.

  1. அரிசியையும் உளுந்தையும் சேர்த்து ஊறவைத்து அரைத்து ஆவியில் வேகவைத்து சாப்பிடுவதால் இட்லி இரண்டு மடங்கு சத்தை அளிக்கும்.
  2. ஏனென்றால், அரசியிலும் உளுந்திலும் வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், இரும்பு, கால்சியம், பரஸ்பரஸ் போன்ற பல ஊட்டச்சத்துக் காரணிகள் உள்ளன.
  3. இட்லி சாப்பிடுவதால் உடலில் அமினோ அமிலங்கள் உற்பத்தி அதிகரிக்கும். அவை திசுக்களை புதுப்பிக்க உதவும்.
  4. சிறுநீரக ஆரோக்கியம் சிறுநீரகங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி, அதன் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் காமா அமினோபட்ரிக் என்ற அமினோ அமிலம் 10 மடங்கு அதிகமாக இட்லியில் உள்ளது.
  5. இட்லி மாவை ஒரு இரவு முழுக்க ஊறவைப்பதால், கொண்டை கடலைக்கு நிகரான தாது உப்புக்கள் உடலில் சேரும்.
  6. இட்லிக்குத் தொட்டுக்கொள்ள முருங்கைக்கீரை பச்சடி, முருங்கைக்காய் சாம்பார் மிகவும் சிறந்தது. புதினா, கொத்தமல்லி போன்றவற்றை துவையல் செய்து தொட்டுக்கொள்ளலாம். காரணம், அவற்றில் வைட்டமின் சி ஏராளமாக இருக்கும்.
Advertisements

Leave a Reply