மெக்சிகோ நகரைச் சேர்ந்தவர் எரிக் பிரான்சிஸ்கோ ரோப்லெடோ. இவருக்கு வயது 46 ஆகிறது. இவரது மனைவிக்கு வயது 25 ஆகிறது. வயது பொருத்தம் இல்லாத காரணத்தினால் இருவருக்குள்ளும் நிறைய தகராறு வந்துள்ளது.
கணவன் போதையில் இருந்துள்ளார். தம்பதியிடையே வாக்குவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில் ஆத்திரமும் & போதையும் தலைக்கேறிய கணவன், நேராக கிச்சனுக்கு போய் கத்தியை எடுத்து வந்து மனைவியை சரமாரியாக குத்திவிட்டார். உடம்பில் பல இடங்களில் கத்திகுத்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே மனைவி இறந்துவிட்டார்.
அப்போதும் ஆத்திரமும், போதையும், வெறியும் அடங்காத கணவன், ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு அவருடைய தலை முதல் கால் வரை தோலை உரித்து எடுத்துள்ளார். பிறகு உடல் உறுப்புகளை தனித்தனியாக வெட்டி எடுத்து கொண்டு போய், ஒரு ஏரிரயில் வீசினார்.
அதற்கு பிறகு முதல்மனைவிக்கு போன் செய்து தான் எப்படி எல்லாம் கொலை செய்தேன் என்பதை ஒன்றுவிடாமல் விளக்கி இருக்கிறார். இதை போனில் கேட்டதற்கே முன்னாள் மனைவி அதிர்ச்சி அடைந்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதற்கு பிறகுதான் போலீசார்விரைந்து சென்றனர். அப்போது மிச்சம் மீதி இருந்த உடல்பாகங்களை கைப்பற்றி இருக்கின்றனர். கணவனை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு மெக்சிகோ நகரமே வெலவெலத்து காணப்படுகிறது. தோல் உரிக்கப்பட்ட நிலையில் இருந்த பெண்ணின் சடலம் போட்டோ எடுக்கப்பட்டுள்ளது.