Home செய்திகள் சரிகிறதா சரவணா பவன் ஓட்டல் சாம்ராஜ்யம்?!!

சரிகிறதா சரவணா பவன் ஓட்டல் சாம்ராஜ்யம்?!!

208
0

சரவண பவன் ஓட்டலில் வேலை செய்யும் தொழிலளர்களுக்கு அந்த நிறுவனம் மாதா மாதம் செலுத்தும் பி.எப்., மற்றும் ஈஎஸ்ஐ தவணையை செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னையில் முளைத்து வெளிநாடுகளிலும் பரவி இருக்கும் சரவண பவன் ஓட்டலில் 3190 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதா மாதம் செலுத்த வேண்டிய பி.எப்., மற்றும் ஈஎஸ்ஐ தவணையை அந்த நிறுவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விரைவில் செலுத்துவதாக அந்த நிறுவனம் உறுதியளித்துள்ளது.

கடந்த ஜூலை மாதத்தில்தான் சரவண பவன் நிறுவனத்தின் உரிமையாளர் பி. ராஜகோபால் உடல்நலம் பாதிக்கப்பட்டு காலமானார். இந்த நிலையில், அந்த நிறுவனத்துக்கு வர்த்தக, நிதி ரீதியாக நெருக்கடிகள் முற்றியுள்ளது.

இதுதொடர்பான விசாரணை வியாழக்கிழமை நடந்துள்ளது. அப்போது இந்த நிறுவனத்தின் மூத்த மேலாளர்களுடன் பிஎப் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சுமார் ரூ. 20 கோடிக்கும் அதிகமாக நிலுவை வைத்து இருப்பது தெரிய வநதுள்ளது. சிறிது சிறிதாக இந்த நிலுவையை அடைத்து விடுவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளனர்.

ஆனால், இந்த நிலுவை சரவண பவன் அதிகாரிகள் கூறுவதைவிட அதிகமாக இருக்கும் என்றும், அதுகுறித்த விசாரணை செப்டம்பர் 30 ஆம் தேதி நடக்கும் என்றும் பிஎப் அதிகாரிகள் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சரவண பவனின் மனிதவளத்துறை தலைமை அதிகாரி சிவசங்கர் கூறுகையில், ”கடந்த மாதம் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் நிலுவைத் தொகை செலுத்தியுள்ளோம். வரும் 2020 மார்ச் மாதத்திற்குள் மேலும் ரூ. 3 கோடி செலுத்த முடிவு செய்துள்ளோம். இதேபோல் தொழிலாளர்களின் ஈஎஸ்ஐ நிலுவையையும் சிறிது சிறிதாக செலுத்த முடிவு செய்துள்ளோம்.

பாண்டி பஜாரில் இருக்கும் எங்களது ஓட்டலில் குத்தகை காலம் முடிந்துவிட்டது. மேலும் அங்கு வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடம் இல்லை. ஆதலால் அந்த ஓட்டலை மூடிவிட்டோம். எங்களது அனைதுத்துக் கடைகளையும் புதுப்பித்து வருகிறோம். விரைவில் மாற்றம் வரும். மேலாளர்கள் முதல் ஆட்டிட்டர்கள் வரை அனைத்து மாற்றங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது” என்றார்.

சரவண பவன் நிறுவனத்தில் மொத்தம் 3,190 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அனைவரும் தற்போது பணியில் உள்ளனர். யாருக்கும் லே ஆப் விடவில்லை. பாண்டி பஜார் ஓட்டல் தற்போது மூடப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply